வியாழன், 5 ஜனவரி, 2012

மனதில் ஒரு கல்லாய் நீ விழுந்தாய் 
அதில் சிதறிய நீராய் 
வெளியே கிடந்தாய் 
எழுத நினைத்தேன்
கவிதையை
எழுத்தும்  வரவில்லை
                                                                      எண்ணமும்
தோன்றவில்லைஅவளை நினைத்தேன்....
உயிருள்ள கவிதையாய்
அவள் என்மனதில.....

உயிரற்ற கவிதை
எதற்கு என்றெண்ணி
என் மனக்  கவிதையை
                                                     வாசிக்கத்  தொடங்கினேன்...............
குளத்தில் வீசிய கல்லாய் 
உன் மனதிலே அமிழ்ந்தாலும்
என் காதல் 
விரிக்கும் நீர்த்திவலையாய் 
பரவிக் கொண்டிருக்கிறது 
உன் மீதான பாசமும் நேசமும்
என்றென்றும் மாறாக்  காதலுடன்.........