செவ்வாய், 10 ஜனவரி, 2012

சொல்லாத பதில்....கேட்கப்படாத கேள்வி.?

ஆர்ப்பாட்டமான அழைப்பு
அக்கறையாய் நலம் விசாரிப்பு
சலிக்காத சம்பாஷனை
ர்த்தமற்ற அங்கலாய்ப்பு
நேச பரிமாற்றம் 
அவஸ்தையான வெட்கம் .........


சில புரிதல்கள்
சில சமாளிப்புகள்
சில கட்டளைகள் 
சில வற்புறுத்தல்கள்
சில கோபங்கள் 
சில கெஞ்சல்கள்................


ஒரு சொல் பனித்தூறல்
மறு சொல் எரியும் தணல்
அத்தனை சந்திப்பிலும்
இறப்பும் உயிர்ப்பும் 
சாதாரண ஒரு நிகழ்வாகி விடுகிறது....!!!

எல்லா சந்திப்புகளின் முடிவிலும்
   எப்போதும்
 சில பதில்கள்
   மிச்சமிருக்கின்றன
   கேட்க மறந்த
   சில கேள்விகளும்
      சொல்ல விட்டுப்போன 
       சில விளக்கங்களும்....

சொல்லாத பதில்களை விடவும் கேட்கப்படாத கேள்விகள் மிகுந்த அவஸ்த்தையானவை..!!!!