ஞாயிறு, 8 ஜனவரி, 2012

சூரியகிரகணம்

சந்திக்கும் போதெல்லாம்
பேச்சினிடை இடையே 
 "அப்புறம்...நீங்கதான் சொல்லணும்" என்கிறாய்...
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொன்னால்...சொல்லாமல் போய்விடுவாயோயென்று  
சொல்லாமல் தவிக்கிறேன்... என் காதலை...
சூரியனை சந்திரன் மறைப்பதால்சூரியகிரகணம்
வருவதாக  வானவியல் கூறுகிறது 
எனக்கென்னமோ நீ அருகில் வரும்
சமயமெல்லாம்சூரியகிரகணம் தோன்றுகிறது....!!!!