வியாழன், 12 ஜனவரி, 2012

உன் நினைவுகள்

 
                                                                     
புது பொம்மை
பத்திரமாக இருக்கிறதா
பாதி தூக்கத்தில்
தடவி பார்க்கும் குழந்தை போல...
நடு இரவில்
மெல்ல தொட்டு
தடவிப் பார்க்கிறேன்
உறக்கத்தில் இருக்கும் 
உன் நினைவுகளை !!

                                                                    
பேசதொடங்கினாய்
வீணை சுரங்கள் மறந்தது !
சிரிக்க தொடங்கினாய் 
வண்ணத்துபூச்சியினை 
வரைந்து 
வண்ணம் தீட்டிவிட்டேன் 
நான் !
                                                                  

சுற்றிலும் 
கொழுந்துவிட்டு எரியும் 
நெருப்பு 
வளையத்துக்குள் இருக்கும்  
பற்றி எரியாத 
ஒற்றை கற்பூரம் 
நீ...!