வியாழன், 12 ஜனவரி, 2012

சில சில்மிசங்கள்

எல்லா சந்திப்புகளின் முடிவிலும்  
எப்போதும்
சில பதில்கள்
மிச்சமிருக்கின்றன
கேட்க மறந்த
சில கேள்விகளும்
சொல்ல விட்டுப்போன 
சில விளக்கங்களும்.......
காத்திருக்கிறேன்என்றேன்
'அதுக்கென்னஎன்கிறாய்

'உனக்காகஎன்றேன்
'யாரோ நான்என்கிறாய்

'காதலன்என்றேன்
'உனக்கில்லைஎன்றாய்

'காதல்என்றேன்
'உன்னிடமில்லைஎன்றாய்

'பரவாயில்லை பேசுஎன்றேன்
'பிடிக்கவில்லைஎன்றாய்


'சிரித்தாயேஎன்றேன்
'உன்னை பார்த்து இல்லை' என்றாய்

'திமிர் கூடி போச்சுஎன்றேன்
'எப்ப குறைந்ததுஎன்கிறாய் !

பொறுமை இழந்து
மௌன மடியில் நான் விழ...
...
...
...
'என்ன சைலென்ட்' என்றாய்
'வார்த்தை தீர்ந்ததுஎன்றேன்

'பரவாயில்லை பேசுஎன்றாய்
'போகிறேன்என்றேன்'என்னை விட்டாஎன்றாய்...

சிரித்தேன்...
'சிதைக்காதே' என்கிறாய் !
போடா! நீயும் உன் காதலும் !!
உன் தொடுதலில்
சுருங்கிய
தொட்டாச் சிணுங்கி மனது
நீ சென்றபின்பு
விரிந்து சிரிக்கிறது
ரகசியமாய் !
நான்  கவிதை எழுதவில்லை
எழுத்துக்களின் வழியே
உன்னை நெருங்குகிறேன்...
என்னிடத்தில் உன் ஸ்பரிசம்
தேடியும்
நீ இட்ட முத்தச்சுவடு
வருடியும்
நெஞ்சம் படர்ந்த உன் நினைவுகள்
அணைத்தும்
எழுதி முடியும் தருணம்
சிலிர்த்தும்...
நான் கவிதை எழுதவில்லை
உன்னை எழுதுகிறேன
என்னை வாசிக்கிறேன்...!
வண்ணத்தின் நிழலை
என்னிடம் விட்டுவிட்டு
பிடிபடாமல்
ஓடிக் கொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சி நீ !
நீ  களவும் கற்று  மறந்தாய்... 
என்  இதயத்தைத்  திருடி...
நான்  களவும்  கற்றேன்...
உன்  இதயத்தைத்   திருடி...
மறக்கத்  தெரியாமல்...